இங்கிலாந்துக்கு 4வது வெற்றி

தினகரன்  தினகரன்
இங்கிலாந்துக்கு 4வது வெற்றி

செஸ்டர் லி ஸ்ட்ரீட்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரிவர்சைடு மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸி. 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்தது. பிஞ்ச் 100 ரன், ஹெட் 63, ஷான் மார்ஷ் 101 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 44.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 314 ரன் எடுத்து வென்றது. ஜேசன் ராய் 101, பேர்ஸ்டோ 79, ரூட் 27, மோர்கன் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹேல்ஸ் 34, பட்லர் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராய் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 4-0 என முன்னிலை வகிக்க, கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறுகிறது.

மூலக்கதை