விஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
விஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் !!

துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் - விஜய் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க, வர லட்சுமி, ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கின்றனர். சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு சர்கார் என பெயரிட்டுள்ளனர். இது அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பது படத்தின் தலைப்பிலேயே தெரிகிறது. சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

விஜய்யின் சர்கார் படம் இந்த வருட தீபாவளி ரிலீஸாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை