விஷமான விருந்து சாப்பாடு! - 3 குழந்தைகளின் உயிரைப் பறித்த கிரஹபிரவேசம்

விகடன்  விகடன்
விஷமான விருந்து சாப்பாடு!  3 குழந்தைகளின் உயிரைப் பறித்த கிரஹபிரவேசம்

வீட்டு கிரஹபிரவேச விழாவில் விருந்து சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


File Photo

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹ்தாத் என்ற பகுதியில்தான் இந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது. மஹ்தாத் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மனே என்பவர் தன் வீட்டு கிரஹபிரவேசத்தை முன்னிட்டு நேற்றிரவு கோயிலில் `வாஸ்து சாந்தி' பூஜை நடத்தினார். இந்த பூஜைக்கு வந்தவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். வந்தவர்களுக்கு இந்த விருந்தே விஷமாக மாறியுள்ளது. விருந்து சாப்பிட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருசிலர் வாந்தி எடுத்துள்ளனர். அனைவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. எனவே, அங்கிருந்து வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அவர்கள் உட்கொண்ட உணவில் விஷ தன்மையுடைய பொருள் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். `கோயில் அருகில் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. கோயில் அருகில் விவசாய நிலம் உள்ளது. அங்கு வயலுக்குப் பூச்சி மருந்து அடிக்கும்போது உணவில் கலந்திருக்கலாம். அப்படியில்லை எனில் யாரேனும் உணவில் பூச்சி மருந்து இருந்திருக்கலாம்’ என்னும் கோணங்களில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

மூலக்கதை