`இந்திய பொருளாதாரம் பிரகாசமாக உள்ளது!’ - அருண் ஜெட்லி விளக்கம்

விகடன்  விகடன்
`இந்திய பொருளாதாரம் பிரகாசமாக உள்ளது!’  அருண் ஜெட்லி விளக்கம்

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி ஜனவரி-மார்ச் காலாண்டில் 7.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் பேசும்போது, `மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுவிட்டது' எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். பா.ஜ.க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஏழை மக்களும் சாமானிய மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இன்று பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, `ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் குறைந்து வருகிறது என்று கூறுவது தவறு. பொருளாதார வளர்ச்சியில் இந்திய வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பொருளாதாரம் கடந்த ஆண்டுகளைவிட தற்போது பிரகாசமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை