`அந்தம்மா திருமணம் செய்ய மறுத்துவிட்டார்!’ - குழந்தைக் கடத்தலுக்குக் காரணம் சொன்ன குற்றவாளி

விகடன்  விகடன்
`அந்தம்மா திருமணம் செய்ய மறுத்துவிட்டார்!’  குழந்தைக் கடத்தலுக்குக் காரணம் சொன்ன குற்றவாளி

டெல்லியில் நான்கு வயது சிறுவனை கடத்திச் சென்ற குற்றவாளியின் வாக்குமூலம் போலீஸாரை அதிர வைத்துள்ளது. 

டெல்லி, கிழக்கு துணை ஆணையாளர் பங்கஜ் சிங் இன்று கூறுகையில், `மதுவிஹார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 16-ம் தேதியன்று தன் 4 வயது குழந்தையைக் காணவில்லை, குழந்தையை சிவ்குமார் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம்' எனப் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சந்தேகத்தின் பேரில், சிவ்குமாரைக் கண்காணித்து வந்தோம். அவர்தான் கடத்தினார் என உறுதியாகத் தெரிந்ததும் அவரைக் கைது செய்து விசாரித்தோம்' எனத் தெரிவித்தார். போலீஸாரிடம் குழந்தையைக் கடத்திய சிவ்குமார் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி ரகம். 

`குழந்தையின் தாயாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். என் விருப்பத்தைப் பலமுறை அவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் என் விருப்பத்தை நிராகரித்துவிட்டார். இதனால், குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டேன். குழந்தையைக் கடத்திக்கொண்டுபோய் கொல்கத்தாவில் வைத்துக்கொண்டு, அவரை மிரட்டித் திருமணம் செய்யலாம் என முடிவெடுத்திருந்தேன். இவ்வாறு செய்தால் அவர் நிச்சயம் என்னைத் திருமணம் செய்துகொள்வார் என நினைத்தேன். போலீஸில் சிக்கிக்கொண்டேன்' எனக் கூறியிருக்கிறார். குழந்தைக் கடத்தல் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிவ்குமாரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் டெல்லி கிழக்கு போலீஸார். 

மூலக்கதை