திணறிய பிரேசில்..! நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup

விகடன்  விகடன்
திணறிய பிரேசில்..! நெய்மரை சுற்றி வளைத்த சுவிஸ் வீரர்கள் #Worldcup

ரஷ்யாவில் நடந்துகொண்டிருக்கும் 2018-ம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையில், பிரேசில் மற்றும் ஸ்விட்சர்லாந்து இடையில் நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்திலிருந்தே வலுவான அணிகள் அனைத்தும் அடிகள் பல வாங்கிக் கொண்டிருப்பது உலகளாவிய கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல், அர்ஜென்டைனா போன்ற அணிகள் எவ்வளவு சிரமப்பட்டும் வெற்றிக்கான கோலை அடிக்க முடியாமல் ஆட்டத்தை டிராவில் தான் முடிக்க முடிந்தது. ஞாயிறு ஆட்டத்தில்கூட சென்ற உலகக் கோப்பையின் சாம்பியனான ஜெர்மனியே இந்தமுறை முதல் ஆட்டத்திலேயே தோல்வியைத் தழுவியிருப்பது மற்ற அணிகள் புத்துயிர் பெற்றுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இதுவரை பிரசில் பங்கேற்ற 20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டங்களில் 16 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தகைய வலிமையான அணியை இன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து தன்னை வலிமையான அணியாக நிருபித்துள்ளது ஸ்விட்சர்லாந்து.  

அந்த வரிசையில் தற்போது பிரேசிலும் ஸ்விட்சர்லாந்திற்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் அதே நிலையைச் சந்தித்துள்ளது. இதிலும் மற்ற ஆட்டங்களைப் போலவே ஜெர்மனியின் முக்கிய ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. ஆட்டத்தின் நடுவே பல சூழ்நிலைகளில் பந்தைச் சரியாகக் கொண்டுசேர்க்க விடாமல் தடுக்கப்பட்டார். பிலிப் கொடினோஹ் முதல் பாதியின் இறுதியில் ஒரு கோல் அடித்து பிரேசில் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

ஆனால், இரண்டாவது ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீவன் ஸூபர் ஒரு கோல் அடித்துச் சமன்செய்தார். அதன்பிறகான ஆட்டத்தில் இரண்டு அணியிரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள முனைந்ததில் டிராவில் முடிந்தது ஆட்டம். ஐந்து முறை உலகக் கோப்பை சாம்பியனாக இருந்த பிரேசில் அணி இன்றைய ஆட்டத்தில் வளர்ந்துவரும் ஸ்விட்சர்லாந்திற்கு எதிராக வெற்றியடைய முடியாமல் திணறியதும், பல்வேறு சூழல்களில் நெய்மர் வீழ்த்தப்பட்டதும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மூலக்கதை