நயன்தாரா, சமந்தா, நித்யா மேனன்... ஜெயலலிதா பயோபிக்கில் யார்..!? #VikatanSurvey

விகடன்  விகடன்
நயன்தாரா, சமந்தா, நித்யா மேனன்... ஜெயலலிதா பயோபிக்கில் யார்..!? #VikatanSurvey

`மகாநடி’, `நடிகையர் திலகம்’ என்ற பெயர்களில் நடிகை சாவித்திரியின் பயோபிக் வெளியானதும், அதில் சாவித்திரியாகவே கீர்த்தி சுரேஷ் மாறியிருந்ததும் அனைவருக்கும் தெரியும். அதுவரை கீர்த்தி சுரேஷின் முகபாவனைகளை வைத்து மீம்ஸ் போட்டவர்கள், இந்தப் படத்துக்குப் பிறகு கீர்த்தியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். பலருக்கு இந்தப் படம் பிடித்திருந்தாலும், `சாவித்திரியின் வாழ்க்கையைச் சரியாகக் காட்சிப்படுத்தவில்லை', `எம்.ஜி.ஆர், சிவாஜி, சந்திரபாபு பகுதிகள் இல்லை', `ஜெமினி கணேசனை நெகட்டிவாகக் காட்சிப்படுத்திவிட்டார்கள்' எனச் சில குறைகளை இந்தப் படத்தின்மேல் வைத்தார்கள். எது எப்படி இருந்தாலும் சாவித்திரியின் பயோபிக் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது. சாவித்திரியின் பயோபிக் பார்த்த பலருக்கும், `ஜெயலலிதா பயோபிக் வந்தால் எப்படி இருக்கும்’ என்று நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

அப்படி ஜெயலலிதாவின் பயோபிக் எடுத்தால் அதில் ஜெயலலிதாவாக யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

 

மூலக்கதை