ஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ஜூன் 7ல் காலா ரிலீஸ்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் மீண்டும் இணைந்திருக்கும் படம் காலா. இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. ரஜினியுடன், சமுத்திரகனி, அருள்தாஸ், ஹிந்தி மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ், ஹூயூமா குரேஷி, ஹிந்தி நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், ஏப்., 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் திரையுலகில் நிலவி வந்த ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகி உள்ளது. காலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆன தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை