தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...

சமீப காலமாக பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்களின் கவனம் கிராமப் புற கதைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் விவசாயத்திற்கும், கிராமப்புற வாழ்வியலுக்கும் பெருகிவரும் ஆதரவே என்றால் அது மிகையாகாது.  

ஒரு கிடாபியின் கருணை மனு, மதுரை வீரன், கொடி வீரன், மன்னர் வகையறா உள்ளிட்டப் படங்களை அடுத்து, கிராமப்புற பின்னணியில் பல புதிய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும், விவசாயத்தை முன்னிறுத்தி கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு சான்றாக, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் முழுக்க முழுக்க கிராமங்களையே மையப்படுத்தி கதை பின்னப்பட்டிருப்பதோடு, விவசாயமும், அரசியலும் கலந்து படமாக்கப்படுகிறது. அஜித்தின் பெயரிடப்படாத புதிய படம், சிவகார்த்திகேயனின் சீமராசா, உதயநிதியின் கண்ணே கலைமானே, விஷாலின் சண்டைக் கோழி -2 , பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம், சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் வெள்ளை யானை, அமீர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை, கத்திரிக்கா வெண்டக்கா உள்ளிட்ட பல புதிய  படங்கள் கிராமங்களையம்,  விவசாயத்தையும் மையமாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன.

முன்னணி நடிகர்கள் கூட விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதை அடுத்தே, இப்படிப்பட்ட கதைகள் உருவாக்கப்படுவதாக, கோடம்பாக்க வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மூலக்கதை