விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
விஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி!!

நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் அரசியல் படமாக உருவாகி வருவதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் இப்படத்தில் அரசியல்வாதியாக பழ.கருப்பையாவும், அரசியல் கட்சியின் தலைவராக நடிகர் ராதாரவியும் நடித்து வருவதாகவும், இவர்களுடன் வரலட்சுமி அரசியல் கதாபாத்திரத்திலும், வில்லியாகவும் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மல்ட்டி மில்லியனராக நடிப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில் வரலட்சியின் கதாபாத்திரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை