காலாவை முந்துமா விஸ்வரூபம் 2?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
காலாவை முந்துமா விஸ்வரூபம் 2?

தமிழக திரைத்துறையினர் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தத்தால் பல்வேறு படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளன. வேலைநிறுத்தத்தால் வெளிவராமல் இருக்கும் படங்களை சென்சார் பெற்ற தேதிகளின் அடிப்படையில் தான் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளார்கள்.

அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த 'காலா' படம் சென்சார் வாங்கியதற்கு முன்பாகவே 'விஸ்வரூபம் 2' படம் சென்சார் வாங்கிவிட்டதாம். ஆனால், ஸ்டிரைக் நடந்து வருவதால் அது பற்றி அறிவிக்காமல் இருக்கிறார்களாம். மேலும், 'காலா' படத்தின் ரிலீஸை ஜுன் மாதத்திற்குத் தள்ளி வைத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, 'விஸ்வரூபம் 2' படம் மே மாதம் இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை