செல்வராகவன் - சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே - சேகுவேரா தோற்றத்தில் சூர்யா - தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
செல்வராகவன்  சூர்யா படத்தின் பெயர் என்.ஜி.கே  சேகுவேரா தோற்றத்தில் சூர்யா  தீபாவளிக்கு வெளியாகிறதாம்!!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘என்.ஜி.கே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை  நேற்று மாலை ஐந்து மணி அளவில் நடிகர் சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.பிரசன்னா எடிட் செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை