ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

2.0, காலா ஆகிய படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில், 'என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. என் கனவு நிறைவேறுகிற தருணம் இது. நன்றி தலைவா...' என்று மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வெளிவந்துள்ளது. பவுர்ஃபுல்லான ஒரு வில்லன் கதாபாத்திரம் என்பதால் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க கேட்டுள்ளார்களாம் படக்குழுவினர். இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை