கருணாநிதி மீண்டு வந்தால் தமிழும், தமிழ்நாடும் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
கருணாநிதி மீண்டு வந்தால் தமிழும், தமிழ்நாடும் ...

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலம் இன்று முழு ஓய்வில் உள்ளார். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதால் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர்.


 

குறிப்பாக பாரத பிரதம நரேந்திரமோடி, கருணாநிதியை சந்தித்த பின்னர் பல அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் சற்றுமுன்னர் கருணாநிதியை கவியரசு வைரமுத்து அவருடைய இல்லத்தில் சந்தித்தார்

கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய வைரமுத்து, \திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டு வந்தால் தமிழும், தமிழ்நாடும் மீளும்' என்று கூறினார்.

மெலும் கருணாநிதியின் உதடுகள் பேசுவதற்கு முயற்சிப்பதாகவும், அவரது உதடு அசைவுகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்றும் கூறியுள்ளார்.

.

மூலக்கதை