வியாதிக்காரன் வாந்தியை எம்பியின் பேச்சுடன் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
வியாதிக்காரன் வாந்தியை எம்பியின் பேச்சுடன் ...

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனை பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை நுழைந்தது அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக எம்பி அன்வர் ராஜா, சென்னையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை சுத்தப்படுத்த வருமான வரித்துறை சோதனை உதவியாக இருக்கும் என கூறினார்.


    வருமான வரித்துறையை சீண்டும் விதமாக அன்வர் ராஜா எம்பி பேசியதற்கு அவரை டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார் எஸ். வி. சேகர். அவர் தனது டுவிட்டரில் வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேச, இங்கே அன்வர் ராஜா & குழுவினரை அனுகவும் என நக்கலடித்துள்ளார்.

அன்வர் ராஜாவின் பேச்சை எஸ். வி. சேகர் வியாதிக்காரன் வாந்தியுடன் ஒப்பிட்டுள்ளார்.

.

மூலக்கதை