ரேஷன் கடைகளில் விற்கப்படும் பருப்பை அமைச்சர்கள் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ரேஷன் கடைகளில் விற்கப்படும் பருப்பை அமைச்சர்கள் ...

தமிழக ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தலைவர் விஜயகாந்த் ரேஷன் கடைகளில் விற்கப்படும் மசூர் பருப்பை வாங்கி அமைச்சர்கள் சாப்பிடுவார்களா என கேள்வி எழுப்பினார்.


    ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விஜயகாந்த் ஈபிஎஸ், ஓபிஎஸ் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வேண்டும். அப்போது தான் மக்களுக்கு உண்மை நிலை தெரிய வரும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நல்ல நடிகர்கள் என்றார்.   மேலும், தமிழக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டது சந்தேஷம். மாநில சுயாட்சி எங்குள்ளத.

ரேஷன் கடையில் விற்கப்படும் மசூர் பருப்பை அமைச்சர்கள் வாங்கி சாப்பிடுவார்களா? சர்க்கரை விலையை ஏற்றியது தவறு.

5 ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 5 விலை ஏற்றலாம் என தெரிவித்தார் விஜயகாந்த்.

.

மூலக்கதை