ரெஸ்டாரண்ட் செல்லும் மக்கள் கவனத்திற்கு; அமலுக்கு ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ரெஸ்டாரண்ட் செல்லும் மக்கள் கவனத்திற்கு; அமலுக்கு ...

அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

 
  கடந்த வாரம் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 177 பொருட்கள் மீதான 28% ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. தற்போது 50 பொருட்களுக்கு மட்டும் 28% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் ரெஸ்டாரண்டுகள் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டது.   18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெஸ்டாரண்ட் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 5% வரி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு இந்த புதிய வரிவிதிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு இந்திய ஹோட்டல் உரிமையாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேலும் ரெஸ்டாரண்ட் தொழிலுக்கு இனிமேல் இன்புட் டாக்ஸ் கிரெடிட் வசதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை