ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களை கடத்த திட்டமிடும் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களை கடத்த திட்டமிடும் ...

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோரிக்கை மூலம் வோடாபோன் நிறுவன சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என வோடாபோன் அறிவித்துள்ளது.

 

  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது சேவைகளை டிசம்பர் 1ஆம் தேதி நிறுத்தப் போவதாக அறிவித்தது. அதன் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்குக்கு மாறிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

அதைத்தொடர்ந்து இந்த வாய்ப்பை வோடாபோன் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.   அதன்படி ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் முறையில் வோடாபோன் சேவையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

நெட்வொர்க் குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் முறையில் வோடாபோன் நிறுவன சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.   இதன்மூலம் ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக வேடாபோன் சேவையில் இணைவதோடு, சிறப்பான இணைப்பை வழங்க முடியும் என வோடாபோன் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை