திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
திரைத்துறையில் முன்னுதாரணமாக விளம்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள்!

 

நடிகர் விஜய் சேதுபதி அணில் சேமியா விளம்பரத்தில் நடித்தற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.49.70 லட்சத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது ..   தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன தன்னை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியை செய்திருக்கிறார். இந்த நல்ல மனதிற்கும், நல்ல முயற்சிக்கும், முன்னுதாரணமான செயல்பாட்டிற்கும் வலைத்தமிழின் பாராட்டுக்கள். வணிக நோக்கத்தையும், புகழையும் முன்னிறுத்தி  இயங்கும் கனவுப்பட்டறையில் ஓரிரு படங்கள் ஓடியதும் அரசியலில் நேரடியாக முதலமைச்சர் ஆகவேண்டும்  என்ற சிந்தனையில் வலம் வருவதை நாம் காண்கிறோம் .    இந்த நிலையில்  திரைத்துறைக்கே உரிய  எந்தவித பந்தாவும் இல்லாமல்,  இயற்கையான போக்கில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சமூகநல நோக்கம் கொண்ட பல திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருவது தமிழ் திரைத்துறையின் தரத்தை உயர்த்திவருகிறது. இன்று விஜய் சேதுபதி நடித்துள்ள படம் என்றால் நம்பி குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளதை வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும்.  வளர்ந்துவரும் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் குரல் கொடுப்பதும், தானும் இந்த சமூகத்தின் அங்கம் என்பதை உணர்ந்து, அறம் சார்ந்து மக்கள் அவதியுறும்போது குரல் கொடுப்பதும், சினிமாவை      பணம் ஈட்டி, புகழ் சேர்ப்பதற்கான கருவியாக மட்டும் கருதாமல், மக்களிடம் நல்ல கருத்துக்களைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்துவதும், ஈட்டிய பணத்தை நற்பணிகளுக்காக வழங்குவதும் அவரது மதிப்பை கூட்டுகிறது .  ஜல்லிக்கட்டு, மீத்தேன் திட்டம், ஜிஎஸ்டி என்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் முன்வந்து தன் தொழிலைப் பற்றி பார்க்காமல் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் இவர்.  அரியலூர் மாவட்டம் கல்வியில் மட்டுமின்றி, தனிநபர் வருவாய் உள்ளிட்ட சமூக, பொருளாதார குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. அம்மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி உதவியிருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் சேதுபதியின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

நடிகர் விஜய் சேதுபதி அணில் சேமியா விளம்பரத்தில் நடித்தற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தில் ரூ.49.70 லட்சத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள 774 அங்கன்வாடிகள், ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைந்தோர் பள்ளி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 10 அரசு பார்வையற்றோர் பள்ளிகள், 11 செவித்திறன் குறைந்தோர் பள்ளிகள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசிடம் வழங்கப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

   
தகுதியிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன தன்னை மாய்த்துக்கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவியை செய்திருக்கிறார். இந்த நல்ல மனதிற்கும், நல்ல முயற்சிக்கும், முன்னுதாரணமான செயல்பாட்டிற்கும் வலைத்தமிழின் பாராட்டுக்கள்.


வணிக நோக்கத்தையும், புகழையும் முன்னிறுத்தி  இயங்கும் கனவுப்பட்டறையில் ஓரிரு படங்கள் ஓடியதும் அரசியலில் நேரடியாக முதலமைச்சர் ஆகவேண்டும்  என்ற சிந்தனையில் வலம் வருவதை நாம் காண்கிறோம் .   


இந்த நிலையில்  திரைத்துறைக்கே உரிய  எந்தவித பந்தாவும் இல்லாமல்,  இயற்கையான போக்கில், குடும்பத்துடன் பார்க்கும் வகையில் சமூகநல நோக்கம் கொண்ட பல திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருவது தமிழ் திரைத்துறையின் தரத்தை உயர்த்திவருகிறது. இன்று விஜய் சேதுபதி நடித்துள்ள படம் என்றால் நம்பி குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளதை வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும்.  வளர்ந்துவரும் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் குரல் கொடுப்பதும், தானும் இந்த சமூகத்தின் அங்கம் என்பதை உணர்ந்து, அறம் சார்ந்து மக்கள் அவதியுறும்போது குரல் கொடுப்பதும், சினிமாவை      பணம் ஈட்டி, புகழ் சேர்ப்பதற்கான கருவியாக மட்டும் கருதாமல், மக்களிடம் நல்ல கருத்துக்களைக் கொண்டு செல்வதற்காக பயன்படுத்துவதும், ஈட்டிய பணத்தை நற்பணிகளுக்காக வழங்குவதும் அவரது மதிப்பை கூட்டுகிறது .  ஜல்லிக்கட்டு, மீத்தேன் திட்டம், ஜிஎஸ்டி என்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் முன்வந்து தன் தொழிலைப் பற்றி பார்க்காமல் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருப்பவர் இவர். 
அரியலூர் மாவட்டம் கல்வியில் மட்டுமின்றி, தனிநபர் வருவாய் உள்ளிட்ட சமூக, பொருளாதார குறியீடுகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. அம்மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி உதவியிருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் சேதுபதியின் இந்த உதவி திரையுலகைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைய வேண்டும். 

 

மூலக்கதை