மனைவியைக் கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த 17 ஆயிரம் டொலர் செலவிட்டது கனடா!

என் தமிழ்  என் தமிழ்
மனைவியைக் கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த 17 ஆயிரம் டொலர் செலவிட்டது கனடா!

கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை, இலங்கைக்கு நாடு நடத்துவதற்காக செலவிடப்பட்ட செலவு தொடர்பில் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கையருக்கே 17000 டொலர் வரி செலுத்துனர்களால் செலவிடப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜுலை மாதம் 5ஆம் திகதி சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். பொதுவாக கனேடிய நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் 30 மாதங்களுக்கே எடுத்து கொள்ளப்படும். எனினும் சிவலோகநாதன் தனபாலசிங்கத்தின் வழக்கு விசாரணைகளுக்கு 56 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது. அவர் விடுவிக்கப்பட்டதன் பின்னர் கனேடிய எல்லை பாதுகாப்பு பிரிவினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தார்.அதன் பின்னர் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டிற்காக அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.தனது மனைவியை கொலை செய்த 9 மாதங்களில் அவர் 3 முறை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை