வடக்கு மாகாணத்தில் மிருக பலி வேள்விகளுக்குத் தடை

என் தமிழ்  என் தமிழ்
வடக்கு மாகாணத்தில் மிருக பலி வேள்விகளுக்குத் தடை

வடக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை முற்றாகத் தடை செய்து, யாழ். மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆலயங்களில் மிருக பலியைத் தடை செய்யக் கோரி, அகில இலங்கை சைவ மகாசபையின் சார்பில் யாழ். மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளின் முடிவிலேயே நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்து ஆலயங்களில் மிருக பலி உடனடியாக தடை செய்யப்படுவதாகவும், அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிடுவதாக, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில், ஆலயங்களில் மிருக பலி வேள்விகள் நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர்,யாழ். குடாநாட்டில், ஆலயங்களில் மிருக பலி வேள்விகள் அதிகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை