ரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் இயக்குகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் உதயநிதி பேசும்போது,’எழில் இயக்கத்தில் பணியாற்றியது புது அனுபவம்.

இப்படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன் மேலும் 2 படங்கள் ஒப்புக்கொண்டிருந்தேன். ஆனால் முதலில் இந்த படம்தான் திரைக்கு வருகிறது.

எழிலின் வேகத்தை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மன்சூர், சூரி, சங்கர், சாம்ஸ், மதுமிதா காமெடியில் கலக்கியிருக்கின்றனர்.

ரெஜினாவுடன் எம்புட்டு இருக்குது ஆசை பாடல் காட்சியில் நடித்ததுபற்றி இங்கு குறிப்பிட்டார்கள்.

அந்த பாடல் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது. வேறொரு படத்தின் கேமராமேனும் லொகேஷனுக்கு வந்து காட்சியை பார்த்தார்.

சிருஸ்டி டாங்கே எதை சொன்னாலும் நம்பிவிடுவார். கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் பாடல்காட்சி படமானது.

கேரவேன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்’ என்றார்.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ரெஜினா முதன்முறையாக கவர்ச்சியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி ரெஜினா கூறும்போது,’தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். முதன்முறையாக தமிழில் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறேன்.

எம்புட்டு இருக்குது ஆசை பாடல்காட்சி கவர்ச்சி பற்றி கூறினார்கள். கிளாமருக்கு ஓ கே சொல்லி நடிக்கும் அந்த பாடல் என்னை ஈர்த்தது’ என்றார்.


நடிகை சிருஸ்டி டாங்கே, மன்சூர்அலிகான், சூரி, லிவிங்ஸ்டன், ரவிமரியா, ரோபோ சங்கர், சாம்ஸ், மதுமிதா, டி. இமான் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை