வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா

தமிழ் முரசு  தமிழ் முரசு
வதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா

அனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் அழைக்கின்றனர்.

தன்னைப் பற்றி கிசுகிசு வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் லேசாக ஒரு புன்னகை தவழவிட்டு நகர்ந்துவிடுவார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அவரைப் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் உடனே எரிந்து விழுகிறாராம். தான் குண்டாகிவிட்டதாக கடந்த ஒரு வருடமாக தகவல்கள் வெளியாகி வருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.மேலும் சில அந்தரங்க விஷயங்களும் அவ்வப்போது லீக் ஆவதாக எரிச்சல் அடைந்தார். தன்னைப்பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்பதை கண்காணித்து வந்தார்.

தனது உதவியாளர் ஒருவர் இந்த செயலில் ஈடுபடுவதாக எண்ணியவர் அவரை அழைத்து கண்டித்ததுடன் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.

இதுபற்றி அனுஷ்கா தரப்பில் விசாரித்தபோது,’அனுஷ்கா எடுத்த இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

தான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியதால் உதவியாளரை நீக்கினாரா அல்லது புதிய உதவியாளரை நியமிப்பதற்காக இப்படி செய்தாரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஆனால் விரைவில் புதிய உதவியாளர் ஒருவரை அவர் வேலைக்கு அமர்த்துவார்’ என்றனர்.

.

மூலக்கதை