விஷால் - சிவகார்த்திகேயன் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விஷால்  சிவகார்த்திகேயன் மோதல்

விஷால், சிவகார்த்திகேயன் படங்கள் முதன்முறையாக நேரடியாக மோதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. துப்பறிவாளன், இரும்புத்திரை, கருப்பு ராஜா வெள்ளை ராஜா படங்களில் தற்போது நடித்து வருகிறார் விஷால்.

வரும் ஆகஸ்ட் 11ம் தேதி துப்பறிவாளன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஷால் நடிக்கும் இரும்புத்திரை படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வெளியாகவுள்ளது.தொடர்ந்து செப்டம்பர் 28ம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘வேலைக்காரன்’ படமும் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   இதையடுத்து விஷால், சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்த நாளில்  மோதலுக்கு தயாராகி வருகிறது.


.

மூலக்கதை