‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது

தமிழில் கே. பாலசந்தர்போல் கமலுக்கு தெலுங்கில் ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் கே. விஸ்வநாத். கமல், ஜெயப்பிரதா நடித்த சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து படங்களை இயக்கியதுடன் மறைந்த எம்ஜிஆரால் பாராட்டப்பட்ட சங்கராபரணம் படத்தையும் இயக்கியவர்.

சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், தாதாசாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

2016ம் ஆண்டுக்கான ‘தாதாசாகேப் பால்கே’ விருது இயக்குனர் கே. விஸ்வநாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 3-ம் தேதி  டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருதை ஜனாதிபதி வழங்க இருக்கிறார். விருதுடன் ரூ.

10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கே. விஸ்வநாத் பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.இவர் இயக்கிய சங்கராபரணம், சப்தபதி, சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து), சூத்ரதாருளு, சுவர்ணாபிஷேகம் ஆகிய படங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளது. தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’, விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’ ஆகிய படங்களில் கே. விஸ்வநாத் நடித்திருக்கிறார்.

87வது வயதில் தாதா சாகேப் விருது பெறும் விஸ்வநாத்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை