ஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரு ஹீரோயின் ஜோடி போதும் : ஜோதிகா விருப்பத்தை சூர்யா நிறைவேற்றுவாரா?

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா இயக்கும் படம் ‘மகளிர்  மட்டும்’. சூர்யாவை மணந்தபிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த ஜோதிகா நீண்ட நாட்களுக்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார்.

இதையடுத்து மகளிர் மட்டும் படத்தில் நடிக்கிறார். சூர்யா தயாரிக்கிறார்.

பெண்களை மையமாக வைத்து உருவாகும் இதில் ேஜாதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா நடிக்கின்றனர்.   இதன் ஆடியோ ரிலீஸில் பேசிய ஜோதிகா, ‘ஹீரோக்களை பின்பற்றும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஹீரோயின்களுக்கு ஹீரோக்கள் எந்தளவுக்கு மதிப்பு தருகிறார்களோ அதையே ரசிகர்களும் பின்பற்றுகின்றனர்.

உங்கள் குடும்ப பெண்களுக்கு தரும் மரியாதையை ஹீரோயின்களுக்கும் தாருங்கள். ஹீரோ பின்னால் சுற்றித்திரியும் கதாபாத்திரங்களை வழங்காமல் கவுரவமான பாத்திரங்களை இயக்குனர்கள் வழங்க வேண்டும்.ஒரு ஹீரோவுக்கு பல ஹீரோயின்களை ஜோடியாக நடிக்க வைக்காதீர்கள். அர்த்தமில்லாமல் ஹீரோக்களை ஹீரோயின்கள் விரட்டி விரட்டி காதலிப்பதுபோல்காட்சி அமைக்காதீர்கள்.

இதை என் கணவரும் தனது படங்களில் பின்பற்றுவார் என்று நம்புகிறேன்’ என்றார். அடுத்து பேசிய சூர்யா,’ ஜோதிகா குறிப்பிட்டதுபோல் என் படங்களில் காட்சிகள் அமைக்க முயல்கிறேன்.

எனது நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் இருக்கும்’ என்று உறுதி அளித்தார்.

.

மூலக்கதை