பிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரபாஸுடன் நடிக்க ஹீரோயின்கள் தூது

பாகுபலி 2ம் பாகம் வரும் 28ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடிக்க சுமார் 4 வருடம் கால்ஷீட் ஒதுக்கித் தந்திருந்தார் ஹீரோ பிரபாஸ்.

இதற்கிடையில் வேறு படம் எதுவும் நடிக்கவில்லை. அடுத்து பிரபாஸ் நடிக்கும் படம்பற்றி எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில் அதுபற்றி திடீர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்துக்கு ‘சாஹு’ என பெயரிடப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பட இயக்குனர் சுஜீத் கூறும்போது,’வித்தியாசமான பின்னணியில் உருவாகும் இதில் பிரபாஸுடன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளை சேர்ந்த நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தியா மற்றும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்கிறது.

வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு.

இஷான்-லாய் இசை அமைக்கின்றனர்.

இப்படத்தின் டீஸர் பாகுபலி 2ம் பாகம் ரிலீஸில் இணைக்கப்படுகிறது. ‘ என்றார்.

பிரபாஸுக்கு ஜோடிபோட தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரசாக்கு இடையே போட்டி நிலவுகிறது. சில நடிகைகள் இயக்குனர், ஹீரோவுக்கு தூது விட்டிருக்கின்றனர்.

பாலிவுட் நடிகைகளும் ஹீரோயின் பட்டியலில் உள்ளனர்.

ஆனால் ஹீரோயின் தேர்வு எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என்கிறது படக்குழு.

.

மூலக்கதை