வேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேடம் விட்டு வேடம் தாவுவதால் அனுஷ்காவுக்கு மாறிய சமந்தா வாய்ப்பு

சமந்தா திருமண சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறார். நாக சைதன்யாவுடன் அக்டோபரில் திருமணம் நடப்பதால் அதற்கான காஸ்டியூம் டிசைன் செய்வது, மெகந்தி, சங்கீத நிகழ்ச்சிகள் வரை மும்முரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

இதற்கிடையில் ஒப்புக் கொண்ட படங்களிலும் நடித்து வருகிறார். சாவித்ரி வாழ்க்கை படத்தில் முதலில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா திடீரென்று அதிலிருந்து விலகினார்.ஸ்லிம் தோற்றத்திலிருந்து மாறி வெயிட் போட வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வின் விதித்த கண்டிஷனே இந்த மாற்றத்துக்கு காரணம். இதனால் அவர் ஏற்கவிருந்த சாவித்ரி பாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு கைமாறியது.

சாவித்ரி வாழ்க்கை படத்தில் தானும் இருக்க வேண்டும் என்று எண்ணிய சமந்தாவுக்கு அப்படத்தில் இடம் பெறும் ஜமுனா கதாபாத்திரத்தில் நடிக்க யோசனை வரவே அதற்கு ஓ. கே சொன்னார்.

கதைப்படி சாவித்ரியும், ஜமுனாவும் போட்டியாளர்கள் என்பதால் அது தன்னை எதிர்மறையாக காட்ட வாய்ப்புள்ளது என்று தயக்கம் எழவே அந்த பாத்திரத்திலிருந்தும் விலகினார்.

அவர் நழுவவிட்ட ஜமுனா கதாபாத்திரத்தில் தற்போது அனுஷ்கா நடிக்க முன்வந்திருக்கிறார். கடைசியாக பத்திரிகையாளர் வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.


.

மூலக்கதை