அமலாபால் ரகசிய டாட்டூ

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமலாபால் ரகசிய டாட்டூ

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்தபிறகு இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தங்கள் இருவரின் ஜோடி படங்களை அடிக்கடி பகிர்ந்தார்.

மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தபின் டுவிட்டர் பக்கத்தில் மேலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் அமலாபால். தோழிகளுடன் ஜாலி டூர் பற்றிய ஸ்டில்கள், புதுபடங்கள் பற்றிய விவரங்கள் என இடைவிடாமல் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

அமலாபால் தனது முதுகு பகுதியில் மர்மமான டாட்டூ வரைந்திருக்கிறார்.

அதை டுவிட்டரில் பகிர்ந்திருப்பதுடன் ரசிகர்களுக்கு ஒரு போட்டியும் நடத்தியிருக்கிறார்.

என் முதுகில் பதித்திருக்கும் டாட்டூ என்ன என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். என்ன என்பதை இப்போதைக்கு நான் சொல்லமாட்டேன், அது ரகசியம்.

நீண்ட காலமாக உள்ளது.

இது மிகவும் பழமையான ஒன்றை குறிக்கும் இந்த டாட்டூ என்ன என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.

.

மூலக்கதை