மன்னிப்பு கேட்ட ‘விசாரணை’ வில்லன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மன்னிப்பு கேட்ட ‘விசாரணை’ வில்லன்

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தில் ஆந்திர போலீஸாக நடித்த வில்லன் நடிகர் அஜய் கோஷ், அடுத்து தப்பு தண்டா படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்பட ஆடியோ விழாவில் பங்கேற்ற அஜய் கோஷ், இயக்குனர் வெற்றிமாறனை புகழ்ந்ததுடன், விசாரணை படம் மூலம் தமிழ் ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொண்டதற்காக மேடையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்தார்.

பிறகு அவர் பேசும்போது,’தெலுங்கு படங்களில் எனக்கு சிறு சிறு வேடங்கள் தரப்பட்டன. என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.

விசாரணை படத்துக்கு பிறகுதான் தெலுங்கில்கூட பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தினமும் காலையில் பேப்பர் படிக்கிறார்கள்.அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் தினமும் காலையில் வாயில் புகையிலை போட்டுக்கொள்கிறார்கள்’ என்று பேசினார். அஜய்கோஷின் இந்த பேச்சு தெலுங்கு படவுலகினரை கோபத்தில் ஆழ்த்தியது.

அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் ஷாக் ஆன அஜய் கோஷ் உடனடியாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அவர்கூறும்போது,’தெலுங்கு டி. வி சேனலில்தான் எனது நடிப்பை ஆரம்பித்தேன்.

அதன் மூலம் அடையாளம் காட்டப்பட்டு இன்று சவுகரியமாக இருக்கிறேன்.

தமிழ் ஆடியோ நிகழ்ச்சியில் தமாஷுக்காக நான் சில கமென்ட்ஸ்களை வெளியிட்டேன். அதேசமயம் விசாரணை படம்தான் எனக்கு அங்கீகாரம் கொடுத்தது.

அதன் மூலம் என் வாழ்க்கை மாறியது. தெலுங்கு நடிகர்கள், நபர்கள் யாரை பற்றியும் நான் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

என் பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

.

மூலக்கதை