‘கத்தி’ ஸ்ருதி, ‘கம்பு’ சமந்தா : சண்டை பயிற்சியில் தீவிரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘கத்தி’ ஸ்ருதி, ‘கம்பு’ சமந்தா : சண்டை பயிற்சியில் தீவிரம்

சுந்தர். சி. இயக்கத்தில் உருவாகும் படம் சங்கமித்ரா.

ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

சரித்திர பின்னணியிலான படமாக இது உருவாகிறது. இதற்காக ஸ்ருதிஹாசன் கத்தி சண்டை பயிற்சி பெற வேண்டும் என இயக்குனர் கூறியிருந்தார்.

அதை ஏற்று லண்டன் புறப்பட்டு சென்றார் ஸ்ருதி. அங்கு பிரத்யேகமாக கத்தி சண்டை பயிற்சி பெறுகிறார்.

பட தரப்பில் இதுபற்றி கூறும்போது. சங்கமித்ரா பாத்திரம் ஏற்கிறார் ஸ்ருதி.

கத்தி சண்டை போடுவதில் திறமையான கதாபாத்திரமாக இது சித்தரிக்கப்படுகிறது. இதற்காக ஸ்ருதி கத்தி சண்டை பயிற்சி பெற சம்மதித்தார்.லண்டனில் உள்ள கத்தி சண்டை சிறப்பு பயிற்சியாளரிடம் பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அவரிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார் ஸ்ருதி.

கத்தி சண்டைக்கான நுணுக்கங்களில் அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்றனர். ஸ்ருதி கத்தி சண்டை பயிற்சி வீடியோவும் வெளியானது.

ஸ்ருதியின் இந்த வீடியோ வெளியானவுடன் சமந்தா ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் சிலம்ப சண்டைக்காக கம்பு பிடித்து சுழற்றி அசர வைக்கிறார்.

நீங்கள் எந்த படத்துக்கு சிலம்ப சண்டை பயிற்சி பெறுகிறீர்கள் என்றால், ‘எந்த படத்துக்காகவும் இல்லை. கலைகள் கற்பது எனக்கு பிடிக்கும்.

இதுவும் ஒரு கலை அதனால் கற்றுக்கொள்கிறேன்’ என்றார். சமந்தா- நாக சைதன்யா திருமணத்தை அக்டோபரில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதை மாற்றி முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் மாதமே திருமணத்தை நடத்தவும் பேச்சு நடக்கிறது.

இறுதி முடிவு எடுக்கவில்லை.

.

மூலக்கதை