லாவண்யாவை இயக்கும் தயாரிப்பாளர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
லாவண்யாவை இயக்கும் தயாரிப்பாளர்

அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா போன்ற படங்களை தயாரித்த சி. வி. குமார் முதன்முறையாக மாயவன் படத்தை இயக்கி உள்ளார். சுதீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடிக்கின்றனர்.

2 வருடத்துக்கு முன் தமிழில் பிரம்மன் படத்தில் நடித்த லாவண்யா, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அவரது புஷ்டியான உடல்தோற்றம் வழக்கமான காதலி வேடம் மட்டுமே பெற்றுத்தந்தது.

பொறுத்துப் பார்த்தவர் கடுமையான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தன்னை தயார்படுத்திக் கொண்டார். அது கைகொடுத்திருக்கிறது.

தமிழில் லாவண்யாவுக்கு ரீஎன்ட்ரி வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குனர்.

மாயவன் பற்றி குமார் கூறும்போது,’படம் தயாரிப்பது எளிது இயக்குவது கடினம். திரில்லர் கதை என்பதால் இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஜிப்ரானின் பின்னணி இசை ரொம்பவும் ஸ்பெஷல். எனவே அதை பாடலுடன் இணைத்து வெளியிடுகிறோம்.

புரமோ பாடலாக மரண கானா விஜி பாடல் வெளியிடப்பட்டது.

டங்காமாரி ஊதாரி பாணியில் இது குத்தாட்டம் போட வைக்கும்’ என்றார்.

.

மூலக்கதை