காடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காடுகள் பாதுகாப்பு பிரசாரத்தில் பிரகாஷ்ராஜ் : விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார்

நடிப்பு தவிர, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுபவர் பிரகாஷ்ராஜ். புறநகர் பகுதியில் பண்ணை வீடு வைத்திருக்கிறார்.

தவிர விலங்குகள் ஆர்வலராகவும் மாறியிருக்கிறார். தற்போது காடுகள் அழிப்புக்கு எதிராகவும், விலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிராகவும் பிரசாரம் செய்ய தொடங்கியிருக்கிறார்.

கர்நாடக அரசின் சார்பில் இவருக்கு காடுகள் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தூதர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிரகாஷ்ராஜ் கூறும்போது,’ ஊருக்குள் விலங்குகள் வருகிறது என்கிறார்கள்.

மக்கள்தான் காட்டுக்குள் ஆக்ரமிப்பு செய்து விலங்குகளின் இருப்பிடத்தை அபகரித்திருக்கிறார்கள்.

அங்கு இடமில்லாமல் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.

தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள காடுகள் விழிப்புணர்வு தூதர் பொறுப்பையடுத்து அடுத்த 3 மாதங்களுக்கு காட்டு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று இதுபற்றி பேச உள்ளேன். அங்குள்ள ஆக்ரமிப்புகளை சமூக ஆர்வலர்கள் மற்றும் எனது பவுண்டேஷன் மூலம் விலைக்கு வாங்கி அதனை அரசிடம் ஒப்படைத்து காடுகளின் விரிவாக்கமாக செய்யவிருக்கிறேன்.

வருங்கால சந்ததிகளுக்கு இயற்கை வளத்தை காப்பாற்றியளிக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது’ என்றார்.

.

மூலக்கதை