பிலியந்தல துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட மூவருக்கு மறியல்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR

போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காகச் சென்றிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பின் பிரிவின் அதிகாரிகள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களை, எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கெஸ்பேவா நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில், 44 வயதான பெண்ணொருவரும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களும் அஹங்கம பிரதேசத்தில் வைத்து, நேற்று (21) கைது செய்யப்பட்டதாக, மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும், குற்றச்செயல் இடம்பெறுவதற்கு உதவி புரிந்தமை, சாட்சிகளை மறைத்தமை, போலியான தகவல்களை வெளியிட்டமை மற்றும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மூலக்கதை