24 மணிநேரம் வேலை நிறுத்தம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
24 மணிநேரம் வேலை நிறுத்தம்

அரச வைத்தியர்கள் சங்கம், இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.   

மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான (சைட்டம்) தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. 

தலைவரான, வைத்தியர் அனுருத்த பாதெனியவை, இன்று(22) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இந்த வேலைநிறுத்தப் போராட்டம், செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடையும் என்றும் அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீந்த சொய்சா தெரிவித்தார். 

மூலக்கதை