வழிபாட்டுத் தலம் மீது பெற்றோல் குண்டுவீச்சு

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
வழிபாட்டுத் தலம் மீது பெற்றோல் குண்டுவீச்சு

குருநாகல், மல்லவபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலின் ​மீது, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.   

பெற்றோல் குண்டுகள் நான்கு வீசப்பட்டுள்ளன. எனினும், ஒன்றே ஒன்றுதான் வெடித்துள்ளது. அதனால், பள்ளிவாசலின் சுவருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது. 

அந்த பள்ளிவாசலில், சீசீடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும், சம்பவம் தொடர்பில் பதிவாகியுள்ள காட்சிகள் தெளிவாக இல்லை என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.   

இதே​வேளை, இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர், இந்தப் பள்ளிவாசலின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது. எனினும், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரையிலும் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

 

 

மூலக்கதை