தாய்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
தாய்பால் புரைக்கேறியதில் சிசு மரணம்

-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், சுஜிதா   
தாய்பால் புரைக்கேறியதில், 15 நாட்களேயான பெண் சிசுவொன்று மரணமடைந்துள்ள சம்பவமொன்று, வட்டகொடை சவுத் மடக்கும்புர தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.   

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,   

20 வயதான இளம் தாயொருவர் 15 நாட்களுக்கு முன்னர் பிரசவித்த, தன்னுடைய பெண் சிசுவுக்கு, சனிக்கிழமை இரவு, தாய்ப்பால் கொடுத்து உறங்க வைத்ததன் பின்னர், அந்தத் தாயும் உறங்கிவிட்டார்.  

சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்த அந்த தாய், அந்த சிசுவுக்கு, பாலூட்டுவதற்கு முயற்சித்துள்ளார். எனினும், அச்சிசு அசைவற்று கிடந்துள்ளது.   

இதனையடுத்தே, தன்னுடைய பச்சிளம் பாலகி மரணமடைந்து விட்டதை அறிந்துள்ளார். அதனையடுத்து, அந்த விவகாரம் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.   

அந்த வீட்டுக்கு, சனிக்கிழமை இரவு வந்த பொலிஸார், அந்த வீட்டை குற்றப்பிரதேசமாக குறிப்பிட்டதுடன், அந்தச் சிசுவின் சடலத்துக்கும் பாதுகாப்பு வழங்கினர்.   

இந்நிலையில், ஸ்தலத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகைதந்த, நுவரெலியா மாவட்ட நீதவான், பிரேத பரிசோதனைக்காக சிசுவின், சடலத்தை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.   

அத்துடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

மூலக்கதை