நுவரெலியாவுக்கு ஜனாதிபதி இன்று விஜயம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
நுவரெலியாவுக்கு ஜனாதிபதி இன்று விஜயம்

-ஆ.ரமேஸ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நுவரெலியாவுக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.
கெப்பட்டிபொல, பிரிவினாவை தேரர் சந்திர ஜோதி நாய்கிமிபானவுக்கு “ஹக்கபத்ரி” முதன்மை தேரர் பதவி வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் முகமாகவே, ஜனாதிபதி, நுவரெலியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிகழ்வு, நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில், இன்று மதியம் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
பௌத்த கலாசார அமைச்சினால், இந்தப் பதவி உயர்வு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை