சிசுவை கடத்த முயன்ற மூவருக்கு விளக்கமறியல்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
சிசுவை கடத்த முயன்ற மூவருக்கு விளக்கமறியல்

பிறந்து இரண்டரை மாதங்களேயான சிசுவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முயற்சித்த பெண்கள் இருவர் மற்றும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இந்திக்க அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.  

அத்துடன், விசாரணைகள் நிறைவடையும் வரை சிசுவை, சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

சிசுவின் தாயான 24 வயதுடைய கலஹாவைச் சேர்ந்த பெண், பிரான்ஸ் பிரஜை மற்றும் அவரை திருமணமுடித்துள்ள அருப்பலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண், ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை