தடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
தடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின

-மு.இராமச்சந்திரன் ,எஸ்.கணேசன்
தடை செய்யப்பட்டுள்ள கிருமி நாசினி மற்றும் கிருமி நாசினியைத் தாயாரிக்கும் இயந்திரங்களுடன் ஹட்டன்-கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.​  

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான, 119க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, திம்புள்ளை-பத்தனை பொலிஸார், கொட்டகலை ரயில் ​நிலையத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரைத் கைதுசெய்தனர்.   

நிலையத்துக்கு, சந்தேகத்துக்கு இடமான பொதிகள் வந்திறங்கியுள்ளதாகவும், அவை யாழ்பாணத்திலிருந்தே வந்துள்ளன என்றும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.   

இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு திம்புள்ளை- பத்தனை பொலிஸார் விரைந்துள்ளனர். அப்போது, அந்தப் பொருட்கள் லொறியொன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.   

லொறியை பொலிஸார் சோதணையிட்ட போது, அதில் இலங்கையில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகள் அடங்கிய 2 லீற்றர் கேன்கள் 144 கைப்பற்றப்பட்டன. அத்துடன், கிருமி நாசினியை தயாரிக்கும் 11 இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.   

வர்த்தக நிலையங்களுக்கு, சட்டவிரோதமானமுறையில், விற்பனை செய்யவே இவை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார், கொட்டகலை கிறிஸ்ன கைது செய்துள்ளனர்.   

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்   

குறித்த சந்தேக நபர், கிருமிநாசினி விற்பனையில், மிக நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நபரென்று பொலிஸார் தெரிவித்தனர்.  

அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மேற்படி கிருமிநாசினிகள், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அங்கு இருந்து மலையகத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மூலக்கதை