எகிப்து மாஜி அதிபர் விடுதலை

கெய்ரோ: எகிப்து அதிபராக இருந்தவர் ஹோசினி முபாரக். 2011ல் இவரது ஆட்சியை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது போலீசுடன் நடந்த மோதலில் 850 பேர் கொல்லப்பட்டனர். 18 நாள் புரட்சிக்குப்பின் முபாரக் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரும், அவரது இரண்டு...


தினகரன்

பக்ரைனில் சிக்கித் தவிக்கும் 500 இந்திய தொழிலாளர்கள் : ஊதியம் வழங்கப்படாததால் உணவின்றி அவதி

மனாமா: அரபு நாடுகளில் ஒன்றான பக்ரைனில் ஊதியம் கிடைக்காததால் இந்திய தொழிலாளர்கள் 500 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். பக்ரைனில் உள்ள எண்ணெய் கம்பெனிகளில் பல்வேறு வேலைகளுக்காக சென்ற அவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக ஆலை நிர்வாகத்தினர் ஊதியம் சரிவர வழங்கவில்லை....


தினகரன்

அமெரிக்காவில் வீட்டில் இறந்த நிலையில் மனைவி, மகன் இருந்ததை கண்டு கணவர் அதிர்ச்சி

நியூஜெர்ஸி: அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் ஒரு வீட்டில் இருந்து இறந்த நிலையில் மனைவி, மகன் இருந்ததை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து போலீசாரிடம் கணவர் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்தியாவில் ஆந்திர பிரதேச மாநிலம் பிராக்சம் மாவட்டத்த்தை சேர்ந்தவர்கள்...


தினகரன்

லண்டனில் நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி : போலீஸ்காரர் உட்பட 5 பேர் பரிதாப பலி

லண்டன் : லண்டனில் நாடாளுமன்றத்தை நோக்கி காரில் தாறுமாறாக வந்த தீவிரவாதியால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற கட்டிடத்தை ஒட்டி தேம்ஸ் நதியை கடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர்...


தினகரன்

போர் குற்றம் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் : இந்தியா மவுனம்

ஜெனீவா: தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது. இலங்கைக்கு அவகாசம் வழங்கியதற்கு 40 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான கானா மட்டும் கால அவகாசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால்...


தினகரன்

ரஷியா முன்னாள் எம்.பி உக்ரைனில் சுட்டுக்கொலை

கிவ்: ரஷியா முன்னாள் எம்.பி. டெனிஸ் வோரோனெங்கோவ் உக்ரைன் நாட்டில் கிவ் என்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினகரன்

இங்கிலாந்து நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டது

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மீது மர்மநபர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றம் நேற்று மூடபப்ட்டது. தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


தினகரன்

எகிப்தில் குண்டு வெடிப்பு: 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சினாய்: எகிப்து நாட்டில் சினாய் என்ற இடத்தில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினகரன்

லண்டனில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்

லண்டன் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இங்கிலாந்துக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தாக்குதலுக்கு இந்தியாவின் கவலையையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமது இரங்கலையும்...


தினகரன்

பிரிட்டன் பார்லிமென்டை தாக்க முயற்சி கும்பல் சுட்டுக்கொலை

லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த வந்த கும்பலை போலீசார் சுட்டுக் ெகான்றனர். பிரிட்டன் தலைநகர் லண்டனின் உள்பகுதியில் அமைந்துள்ளது வெஸ்ட்மின்ஸ்டர். இங்குதான் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஒரு மர்மகார்...


தினகரன்

டோக்கியோவில் நடைபெறும் நூதன கொள்ளை: வீடுகளில் ஐஸ் கிரீம், சாக்லெட் திருடும் கொள்ளையன்

டோக்கியோ: டோக்கியோவில், 4 வருடங்களாக நூதன திருட்டில் ஈடுபட்டுவரும் கொள்ளையன் போலீசில் பிடிபட்டுள்ளான். வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டிலிருக்கும் விலையுர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வது வழக்கம். ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா(51) என்ற கொள்ளையன் வித்தியாசமானவன். இத்திருடன், பணம்...


தினகரன்

டமாஸ்கஸில் பள்ளி மீது அமெரிக்க ஆதரவு விமான படைகள் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு

டமாஸ்கஸ்: உள்நாட்டுப் போருக்கு பயந்து டமாஸ்கஸில் உள்ள பள்ளியில் அடைக்கலம் இருந்த 33 பேர் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் பலியாகியுள்ளனர். சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் தாக்குதலில் ஈடுபட்டு...


தினகரன்

மின்னணு சாதனங்களை விமானத்தில் கையில் கொண்டு வர 6 நாட்டு பயணிகளுக்கு இங்கிலாந்து தடை

லண்டன்: லேப்டாப், ஐபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வர 8 நாடுகளின் பயணிகளுக்கு அமெரிக்க விதித்த தடையை தொடர்ந்து இங்கிலாந்தும் 6 நாட்டு பயணிகளுக்கு இத்தகைய தடையை விதித்துள்ளது. துருக்கி, லெபனான், ஜோர்டன், எகிப்து, துனிசியா மற்றும் சவுதி அரேபியா...


தினகரன்

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் 6 வது இடத்தில சிங்கார சென்னை

லண்டன்: உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னையும் உள்ளது. உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகனாமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு பட்டியல் வெளியிடும். அந்த பட்டியலில் இந்தாண்டுக்கான உலகின் செலவு...


தினகரன்

இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா....


தினகரன்

இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம

இன்று உலக தண்ணீர் தினம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. ‘வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப்’ என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ம் ஆண்டு ஐ.நா....


தினகரன்

சோமாலியாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி : வறுமையால் 26 பேர் உயிரிழப்பு

மொகாதிசு: வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வறுமை, வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன. அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒருநாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை அந்த நாட்டின் அரசு வானொலி...


தினகரன்

தெற்கு சூடானில் விமான விபத்து: 44 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!

ஜூபா: தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. தெற்கு சூடானில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜூபாவில் இருந்து வாவு நகருக்கு வந்த போது இந்த...


தினகரன்

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் பாலைவன நடுவில் செயற்கை ஏரி: நூற்றுக்கணக்கான அரிய பறவைகள் வசிக்கிறது

துபாய்: உலகில் பல்வேறு இடங்களில் நீர்நிலைகள், மரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில் துபாயில் பாலைவனத்தின் நடுவே பறவைகள் வசிக்கும் வகையில் மிகப்பெரிய செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. துபாய் அல்குத்ரா பகுதியில் பாலைவனம் சூழ்ந்த இடத்தின் நடுவில் சோலையாக 10 ஹெக்டருக்கும் அதிகமான&zw...


தினகரன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கான பிரெக்ஸிட் மசோதா நிறவேற்றம்: 29ம் தேதி அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில், கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை அடுத்த வாரம் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்த மசோதா அந்நாட்டு சட்டமாகியுள்ளது. இதனால், விரைவில் ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக...


தினகரன்

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விரைவில் விண்வெளி செல்லவுள்ளார்

லண்டன்: பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இவ்வருடம் விண்வெளிக்கு செல்லவுள்ளார். இவர் லண்டன் கேம்பிரிட்ஜை சேர்ந்தவர் ஆவார். வெர்ஜின் நிறுவனத்தின் கலக்டிக் விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது. அதில் 10 பேர் மட்டுமே பயணம் செய்ய...


தினகரன்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு: 23 பேர் உயிரிழப்பு

பாக்தாத்: ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் கார் குண்டு வெடித்து சிதறியதில் 23 பேர் உயிரிழந்தனர். பாக்தாத்தின் அமில் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த...


தினகரன்

மத்திய கிழக்கு நாட்டவர்களுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு : விமானத்தில் மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல...

வாஷிங்டன்: மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 10 விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு இயக்கப்படும் விமானங்களில் மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட சாதனங்களை கையில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினி, DVD பிளேயர், ஐபேட், கேமராக்கள் மற்றும் வீடியோ கேம் சாதனங்களை...


தினகரன்

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கை பின்னுக்குத்தள்ளி நார்வே முதலிடம்: இந்தியாவுக்கு 122-வது இடம்

உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக நார்வே தேர்வாகியுள்ளது. இதில் இந்தியாவுக்கு 122-வது இடமே கிடைத்துள்ளது. உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் தனி...


தினகரன்

தெற்கு சூடானில் விமான தீப்பற்றி எரிந்த விபத்து : மோசமான வானிலை காரணம் என தகவல்!

தெற்கு சூடானில் நிகழந்த விமான விபத்து ஒன்றில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்நாட்டின் தலைநகர் ஜுபாவிலிருந்து, வாவ் நகருக்கு அந்த விமானம் சென்றது. விமானம் தரையிரங்கியதும் இயந்திரத்தில் தீப்பிடித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் அவரச வழியாக வெளியேறினர். இதனை...


தினகரன்