பெரிய பாண்டியன் மறைவுக்கு ஆவடியில் நகை வியாபாரிகள் மவுன ஊர்வலம்

சென்னை: சென்னை ஆவடியில் நகை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் சென்றனர்.


தினகரன்

சில்லறை விலை பண வீக்கத்தை தொடர்ந்து மொத்தவிலை பணவீக்கமும் அதிகரிப்பு

புதுடெல்லி: சில்லறை விலை பண வீக்கத்தை தொடர்ந்து மொத்தவிலை பணவீக்கமும் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம் 0.34 சதவீதம் குறைந்துள்ளது. அக்டோபரில் 3.59 சதவீதம் இருந்த மொத்தவிலை பணவீக்க விகிதம் நவம்பரில் 3.93...


தினகரன்

கன்னியாகுமரியில் நாளை முழு அடைப்பு : அனைத்து விவசாய சங்கங்கள் அறிவிப்பு

குமரி: கன்னியாகுமரியில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. கன்னியாகுமரியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி போராட்டம் அறிவித்துள்ளனர்.


தினகரன்

கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் தடுப்புச்சுவரில் மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்தனர்.


தினகரன்

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை பாதிப்பு

குன்னூர்: குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் ரயில் நடுகாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 மணி நேர தாமத்திற்கு பின் மரம் அகற்றப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.


தினகரன்

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

சென்னை: காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர். ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் உடல் சென்னை வந்தது. விமான நிலையத்தில் பெரியபாண்டியன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.


தினகரன்

ஓமலூரில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான காடா துணி பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் கடத்தப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான காடா துணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் இருந்து ஜெய்பூருக்கு கொண்டு செல்லப்பட்ட காடா துணி திருப்பூருக்கு கடத்தப்பட்டது. காடா துணியை கடத்திய 3 லாரி ஓட்டுநர்கள் உள்பட 8 பேரை...


தினகரன்

பெரிய பாண்டியன் மறைவுக்கு நகை வியாபாரிகள் மவுன ஊர்வலம்

சென்னை: சென்னை ஆவடியில் நகை வியாபாரிகள் 100க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தினகரன்

கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து : தடுப்புச்சுவரில் மோதி 2 பேர் பலி

சென்னை: சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகனம் தடுப்புச்சுவரில் மோதியதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.


தினகரன்

வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது

சென்னை: கொள்ளையர்களை பிடிக்கும் போது வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் டிஜிபி,...


தினகரன்

பெரியபாண்டியன் கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

ஜெய்ப்பூர்: பெரியபாண்டியன் கொலை குற்றவாளிகளை பிடிக்க ராஜஸ்தானில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.பெரிய பாண்டியன் கொலை தொடர்பாக 15 பேரை ராஜஸ்தான் போலீசார் பிடித்துள்ளனர். பாலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேரிடமும் ராஜஸ்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினகரன்

ராஜஸ்தானில் முஸ்லிம் எரித்து கொலை சம்பவம்: இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மாண்ட் பகுதியில் முஸ்லிம் தொழிலாளியை அண்மையில் குத்திக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் போலீசார் இன்று மாலை 8 மணி முதல் 24 மணி நேரத்திற்கு, ராஜஸ்மாண்ட் மற்றும் உதய்பூர் மாவட்டத்தில் 144...


தினகரன்

குஜராத் தேர்தல்: 12 மணி நேர நிலவரப்படி 39% வாக்குகள் பதிவு

குஜராத்: குஜராத் மாநில சட்டப்பேரவையின் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 183 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் இறுதிக்கட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12 மணி நேர நிலவரப்படி 39% வாக்குகள் பதிவாகியுள்ளது.


தினகரன்

உத்தரகண்ட்டில் டிரக்கின் பாரத்தை தாங்காமல் உடைந்து விழுந்த பாலம்

உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் டிரக்கின் பாரத்தை தாங்காமல் பாலம் உடைந்து விழுந்தது. உத்தரகாசியில் இருந்து கங்கோத்ரி செல்லும் வழியில் இரும்புப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இன்று இந்தப் பாலத்தில் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரக்கின் பாரத்தை...


தினகரன்

கோவையில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானை வரவழைப்பு

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த ஒருவாரமாக காட்டு யானைகள் வலம் வந்து கொண்டுள்ளன. இந்நிலையில் காட்டு யானைகளை விரட்ட சுஜய் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளன.


தினகரன்

குஜராத் தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராணிப் என்ற இடத்தில் பள்ளி ஒன்றில் பிரதமர் மோடி ஒட்டு போட்டார்.


தினகரன்

உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வைகோ வலியுறுத்தல்

சென்னை: உயர்நிலைப்பள்ளிகளில் 950 தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வைகோ வலியுறுத்தியுள்ளார். 35 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் காலியாக உள்ளன என்று வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைகோ கூறியுள்ளார்.


தினகரன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் குறைவு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அக்டோபர் 1 முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 41 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டிய நிலையில் தற்போது வரை 39 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை...


தினகரன்

ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னைக்கு வந்தது

சென்னை: ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஆய்வாளர் உடல் வந்தது.


தினகரன்

எண்ணெய் கசிவு வழக்கு : மீன்வளத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: 2 கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு விபத்தில் நிவாரணம் பெற தகுதியான மீனவர்கள் யார் என்று 3 வாரத்திற்குள் பதில் தர மீன்வளத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் இழந்த வருமானம் உள்ளிட்டவை குறித்த விவரத்தையும் தர பசுமை...


தினகரன்

பிரகார மண்டபம் இடிந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை மூடல்

திருச்செந்தூர் : பிரகார மண்டபம் இடிந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் நடை சாத்தப்பட்டது. பரிகார பூஜைக்கு பின்னரே திருச்செந்தூர் முருகன் கொய்கொள் நடை திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பேச்சியம்மாள் என்பவர் உயிரிழந்தார்; 2...


தினகரன்

குமரி மக்களுக்கு குழு அமைத்து நிவாரண உதவிகள் வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களுக்கு சிந்தாமல், சிதறாமல் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து நிவாரண உதவிகள் வழங்கவும், அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்புகள்,...


தினகரன்

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்

சோமாலியா: சோமாலியாவில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொகதீசுவில் போலீஸ் பயிற்சி மையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.


தினகரன்

வடமாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்குரிமை அரசு வழங்க கூடாது : வேல்முருகன்

சென்னை: தமிழகத்திற்கு வரும் வட மாநிலத்தவர்களிடம் அங்க அடையாளங்கள் பதிவு பெற்று ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்திருந்தார். மேலும் வடமாநிலத்தவருக்கு குடும்ப அட்டையோ வாக்குரிமையோ அரசு வழங்க கூடாது...


தினகரன்

சென்னை ராயபுரத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகம் முற்றுகை

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி அமைச்சர் அலுவலகம் முற்றுகையிட்டனர்.


தினகரன்