உத்திர பிரதேசத்தில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பல்ராம்பூர்: உத்திர பிரதேசத்தில் பல்ராம்பூர் என்ற கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தின. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்துள்ளனர்.


தினகரன்

தோனியின் ஆதார் அட்டை விண்ணப்பம் இணையத்தில் வெளியிட்ட விவகாரம்: ரவி ஷங்கர் பிரசாத்திடம் சாக்‌ஷி புகார்

ராஞ்சி: கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது குடிமக்களின் தனிப்பட்ட அடையாளங்களை சேகரித்து ஓரே அடையாள அட்டையாக ஆதார் எனும் அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கென தனி ஆணையமும் அமைக்கப்பட்டது. தற்போது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது...


தினகரன்

உத்தரப்பிரதேசத்தை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் 5 மாநிலங்களில் மாட்டிறைச்சி கூடங்களுக்கு தடை

ராஜஸ்தான்: உத்தரப்பிரதேச மாநிலத்தை தெடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஆளும் மேலும் 5 மாநில அரசுகளும், அனுமதி பெறாமல் இயங்கிவரும் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதித்துள்ளன. ராஜஸ்தான், உத்தராகண்ட், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மாட்டு...


தினகரன்

குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை : RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதாக வெளியான செய்தி பொய் என்றும் குறிப்பிட்டுள்ளார். RSS இயக்கத் தலைவர் மோகன் பகவத்தை...


தினகரன்

விமான ஊழியரை காலணியால் தாக்கிய விவகாரம்: ரவீந்திர கெய்க்வாட் டிக்கெட்டை ரத்து செய்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: சிவசேனாவின் சர்ச்சைக்குறிய எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ஏர் இந்தியா நிறுவனம் ஒரே நாளில் 2 முறை ரத்து செய்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக மும்பையிலிருந்து டெல்லி செல்வதற்கு ஏர் இந்தியா விமானத்தில் அவர் டிக்கெட் முன்பதிவு...


தினகரன்

ஹைட்ரோ கார்பன் எடுக்க போவதாக கூறப்பட்ட பகுதி காரைக்கால் அல்ல... தமிழக பகுதியே : புதிய...

சென்னை: தமிழகத்தில் நெடுவாசலில் மட்டுமின்றி நாகை மாவட்டத்திலுள்ள ஓரிடத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் புதுவை மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் தான் மத்திய அரசு...


தினகரன்

அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மூலம் ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டது. பின்னர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆதார் அட்டையை செயல்படுத்திவருகிறது. அரசின் அனைத்து வகையான...


தினகரன்

கோதுமை, துவரம் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: கோதுமை மற்றும் துவரம்பருப்புக்கு அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டு என தெரிவித்துள்ளது. கோதுமைக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை கடந்த டிச., 8ம் தேதி...


தினகரன்

கொச்சி இளம்பெண் மானபங்கம் பிரபல சினிமா கதாசிரியருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: கொச்சியில் உள்ள பிளாட்டில் வசித்த இளம்பெண்ணை மானபங்கம் செய்த மலையாள சினிமா கதாசிரியருக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் ஏரநாடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹாஷிர்(30). ஏராளமான மலையாள படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். கடந்த...


தினகரன்

நாளை ரிலீசாகும் ‘கிரேட் பாதர்’ மம்மூட்டி பட காட்சிகள் பேஸ்புக்கில் வெளியானது

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் மம்மூட்டி நடித்த ‘கிரேட் பாதர்’ என்ற படம் ெவளியாவதற்கு முன்பே பேஸ்புக்கில் கிளைமாக்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்த ‘கிரேட் பாதர்’ என்ற படம் நாளை(30ம் தேதி) வெளியாக...


தினகரன்

சிறை நிர்வாகம் அனுமதியளித்தாலும் வெளி உணவுகளை தவிர்க்கிறார் சசிகலா: பயம் காரணம் என்று தகவல்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு வெளியில் இருந்து வரும் உணவை சாப்பிட சிறை நிர்வாகம் அனுமதி வழங்கினாலும் பயம் காரணமாக அதை சாப்பிட அவர் மறுப்பதாக தெரியவந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4...


தினகரன்

சமாஜ்வாடியின் சட்டப்பேரவை தலைவராக அகிலேஷ் தேர்வு

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள் அசம்கான், சிவ்பால்...


தினகரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவு: லோக்பால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: லோக்பால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பொதுமக்களின் பணத்தை கையாடல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் கடந்த 2013ல் லோகபால் மற்றும் லோக் ஆயுக்தா...


தினகரன்

பனிச்சரிவால் சிக்கி தவித்த 71 சுற்றுலா பயணிகள் மீட்பு

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள சங்க்லா கணவாய் மற்றும் டாங்ஸ்டி கிராமம் இடையே பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் 21 பெண்கள் உட்பட 71 சுற்றுலா...


தினகரன்

பண மோசடி வழக்கில் லலித்மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப இன்டர்போல் மறுப்பு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித்மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது. கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் ஒலிபரப்புவதற்கான உரிமையை வழங்கியதில் சுமார்...


தினகரன்

அருண் ஜெட்லியுடனான பேச்சு தோல்வி; ஜனாதிபதியை சந்தித்து தமிழக விவசாயிகள் மனு: போராட்டம் தொடரும் என...

புதுடெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 15வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடனான பேச்சு தோல்வி அடைந்த நிலையில், அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில், போராட்டம் தொடரும் என்று விவசாயிகள்...


தினகரன்

பணியின்போது இறக்கும் துணை ராணுவத்தினருக்கும் தியாகிகள் அந்தஸ்து

மக்களவையில் கேள்வி நேரத்தில் நேற்று பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் கூறியதாவது: காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நாட்டின் பல இடங்களுக்கு சட்ட ஒழுங்கு பணியை பாதுகாக்க அனுப்பப்படும் துணை ராணுவத்தினருக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் உட்பட...


தினகரன்

கோதுமை, துவரைக்கு 10% இறக்குமதி வரி

உணவு தானியங்களின் விலை அதிகரித்ததால் கோதுமை, துவரம் பருப்புக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்தது. இந்நிலையில் உள்நாட்டில் தற்போது கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்தும் அதிகளவு இறக்குமதி செய்யப்படுவதால்,...


தினகரன்

விமான நிலையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

விமான நிலையங்கள் பாதுகாப்பு குறித்து, மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ரிஜிஜூ நேற்று கூறியதாவது: நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள விமான நிலையங்களை தீவிரவாதிகள் தாக்கும் வாய்ப்பு உள்ளதை மத்திய அரசு அறிந்துள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து உள்துறை...


தினகரன்

எம்பி, எம்எல்ஏ வீடுகளில் 73 திருட்டு சம்பவங்கள்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர், “டெல்லி போலீசார் அளித்த அறிக்கையின் படி கடந்த 2014ம் ஆண்டு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளில் திருட்டு தொடர்பாக 25 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....


தினகரன்

கேரள முதல்வர் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது

உஜ்ஜைன்: கேரள முதல்வர் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு தருவேன் என அறிவித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி நேற்று கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தை சேர்ந்தவர் குன்டன் சந்திரவாட். ஆர்எஸ்எஸ் பிரமுகரான இவர், இம்மாத தொடக்கத்தில் கேரள...


தினகரன்

காஷ்மீரில் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பிடிக்க முயன்ற வீரர்கள் மீது கும்பல் கல்வீச்சு: துப்பாக்கிச்சூட்டில் 2...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், வீட்டில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் பிடிக்க முயன்றபோது சிலர் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், பத்காம் மாவட்டம் சதுரா...


தினகரன்

நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேச்சு: ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் சுமூகமாக நிறைவேற்றப்படும்

புதுடெல்லி: ‘‘ஜிஎஸ்டி மசோதாக்களை ஒருமித்த கருத்து அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். பாஜ நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த் குமார், முன்னாள்...


தினகரன்

சிவசேனா எம்பியின் டிக்கெட்டை மீண்டும் ரத்து செய்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: சிவசேனா எம்பியின் டிக்கெட்டை ஏர் இந்தியா விமான நிறுவனம் மீண்டும் ரத்து செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் உஸ்மனாபாத் தொகுதி எம்பி ரவீந்திர கெய்க்வாட். சிவசேனா கட்சியை சேர்ந்தவர். கடந்த வாரம் 23ம் தேதி புனேயில் இருந்து ஏர்இந்தியா...


தினகரன்

ஆணையங்களில் தலைவர் பதவி காலி விவகாரம் எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிசி ஆணையங்களில் தலைவர் பதவி நிரப்பப்படாத விவகாரம் மாநிலங்களவையில் நேற்று 2வது நாளாக எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க விதி எண் 267ன் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்....


தினகரன்