விரைவில் பிரித்தானியாவில் அதிரடி சட்டம் அமுல்! அவதானம்

PARIS TAMIL  PARIS TAMIL
விரைவில் பிரித்தானியாவில் அதிரடி சட்டம் அமுல்! அவதானம்

 பிரித்தானியாவில் புகைப்படிக்கும் விடயத்தில் அதிரடி மாற்றங்களுடன் புதிய சட்டம் அமலாகவுள்ளது

 
பிரித்தானியாவில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
 
அவர்களை தடுக்கும் நோக்கில் பல புதிய சட்டங்கள் போடப்பட்டுள்ளது.
 
அதன்ப்படி, எல்லா விதமான சிகரெட் விலையும் உயர்த்தப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் பத்து சிகரெட் கொண்ட பேக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
 
மெந்த்தால் வகை சிகரெட் இன்னும் சில வருடங்களில் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
மேலும் வரும் மே மாதம் 21 முதல் குறைந்த விலை சிகரெட் விலை £8.82ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
புகையிலை உடல் நலத்துக்கு கேடு என பெரிய புகைப்படம் இனி சிகரெட் பாக்கெட்டில் இடம் பெறும்.
 
மசாலா, மூலிகைகள், மது, சாக்லேட் போன்ற வஸ்துக்களை புகையிலையுடன் சேர்த்து செய்யப்படும் சிகரெட்களும் சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சட்டம் போன வருடமே அமலுக்கு வந்த போதும், கடைகாரர்கள் பழைய சிகரெட்களை விற்க போதிய அவகாசம் கேட்டனர்.
 
இது குறித்து புகைப்பிடித்தல் மற்றும் உடல்நல விழிப்புணர்வு இயக்க தலைவர் Amanda கூறுகையில், புதிய சட்டத்தால் சிகரெட் வாங்க நினைப்பவர்கள் பணம் அதிகம் செலவாகும் என நினைப்பார்கள்.
 
அவர்கள் உடல் நலன் பற்றியும் யோசிப்பார்கள் என கூறியுள்ளார்.
 

மூலக்கதை