இலங்கை கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்து இன்றுடன் 21 வருடங்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கை கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்து இன்றுடன் 21 வருடங்கள்!

 இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்து இன்றுடன் 21 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 

 
அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி 1996ம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் (17-03-1996) நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கிண்ணத்தை வென்றது.
 
சனத் ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறப்பான துடுப்பாட்டமும், சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
 
எனவே வரலாற்றுப்பதிவில் இலங்கைக்கு இன்றைய நாள் (17-03-2017) மிக முக்கியமான அதாவது வெற்றிமிக்க நாளாக கருதப்படுகிறது.
 
உலக வரைபடத்தில் சிறு புள்ளியாக தெரியும் இலங்கை, சர்வதேச ரீதியாக பலருக்கு அடையாளப்படுத்தும் வகையில் இந்த உலகக் கிண்ணம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை