வங்கிகளின் வாராக்கடனுக்கு தீர்வு; விரைவில் புதிய திட்டம் அறிமுகம்

தினமலர்  தினமலர்
வங்கிகளின் வாராக்கடனுக்கு தீர்வு; விரைவில் புதிய திட்டம் அறிமுகம்

புதுடில்லி : மத்­திய நிதி அமைச்­சக உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன், 6 லட்­சம் கோடி ரூபாய் அள­விற்கு உயர்ந்­துள்­ளது. இத­னால், வங்­கி­களின் சொத்து மதிப்பு பாதிக்­கப்­படும் நிலை உரு­வாகி உள்­ளது. வாராக்­க­டன் பிரச்­னைக்கு விரைந்து தீர்வு காண, மத்­திய அரசு, ரிசர்வ் வங்­கி­யு­டன் இணைந்து, புதிய கொள்­கையை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது. இம்­மாத இறு­தி­யிலோ அல்­லது அடுத்த மாத துவக்­கத்­திலோ, புதிய கொள்கை வெளி­யி­டப்­படும்.
வங்­கி­களின் மொத்த வாராக்­க­ட­னில், பெரிய நிறு­வ­னங்­களின் பங்கு, 70 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மாக உள்­ளது. அதி­லும், 40 – 50 நிறு­வ­னங்­க­ளி­டம் தான், பெரும் தொகையை வசூ­லிக்க வேண்­டி­யுள்­ளது.அத­னால், சில சலு­கை­கள் அளித்து, ஒரே தவ­ணை­யில் கடனை வசூ­லிப்­பது உள்­ளிட்ட, பல்­வேறு அம்­சங்­களை கொண்­ட­தாக, புதிய கொள்கை இருக்­கும் என, தெரி­கிறது.வாராக்­க­டன் வசூ­லிப்­பிற்­கான தெளி­வான வழி­காட்­டு­தலை, இக்­கொள்கை வழங்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை