மும்பையில் கப்பல் துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்கு

தினமலர்  தினமலர்
மும்பையில் கப்பல் துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்கு

மதுரை : மும்பை தி ஆர்­கிட் ஓட்­ட­லில், எதிர்­கால கப்­பல் துறை­யின் தொழில்­நுட்ப வளர்ச்சி மற்­றும் அதன் சுற்­றுப்­பு­ற­வி­யல் குறித்த, ‘கிரீன் ஷிப்­பிங் இந்­தியா 2017’ கருத்­த­ரங்­கம், ஏப்., 7ல் நடக்­கிறது. இதை, லிட்­டோ­ரல் கம்­யூ­னி­கே­ஷன்ஸ் நிறு­வ­னம் நடத்­து­கிறது.
தொழில்­நுட்ப மாற்­றங்­கள், நாம் செய்­யும் ஒவ்­வொரு விஷ­யங்­க­ளி­லும் பிர­தி­ப­லிக்­கின்றன. தற்­போது, கப்­பல் துறை­யி­லும் பெரிய அள­வில் தொழில்­நுட்ப மாற்­றங்­கள் நடந்து வரு­கின்றன. இத்­து­றை­யில், மாற்­றங்­கள் தேவை என்­பதை, மத்­திய, மாநில அர­சு­கள் புரிந்து கொண்­டுள்ளன. மாற்­றங்­களை ஏற்று, உத்­வே­கம் பெற வேண்­டிய அவ­சி­யம், தொழில் துறைக்­கும் ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு உத­வும் வகை­யில், இக் ­க­ருத்­த­ரங்­கம் அமை­யும்.
நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் ராஜா வய்ஸ் கூறி­ய­தா­வது: கப்­பல் உரி­மை­யா­ளர்­கள், சுற்­றுப்­பு­றச் சூழல் சான்­றி­தழ் வழங்­கும் நிறு­வ­னங்­கள், கப்­பல் வடி­வ­மைப்­பா­ளர்­கள், இன்­டர்­நே­ஷ­னல் மாரி­டைம் அமைப்­பின் பிர­தி­நி­தி­கள் மற்­றும் மத்­திய, மாநில கப்­பல் போக்­கு­வ­ரத்து துறை அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட, முக்­கிய பிர­மு­கர்­கள் இதில் பங்­கேற்­பர். இந்த ஆண்­டில், மேலும் இரண்டு கருத்­த­ரங்­கு­கள் நடத்­தும் திட்­டம் உள்­ளது. வரும் செப்., மாதம், கடல் அலை­களில் இருந்து, மின்­சா­ரம் தயா­ரிப்­பது குறித்த கருத்­த­ரங்­கம், டில்­லி­யில் நடக்­கிறது. கிழக்­கா­சிய பிராந்­தி­யத்­தின், கப்­பல் தொழில் துறை­யில் சாதனை புரிந்­த­வர்­க­ளுக்­கான விருது வழங்­கு­தல், பாராட்டு விழா மற்­றும் கருத்­த­ரங்கு, டிசம்­ப­ரில், துபா­யில் நடக்­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை