புதிய ஜவுளி கொள்கையில் கைத்தறிக்கு தனி கவனிப்பு

தினமலர்  தினமலர்
புதிய ஜவுளி கொள்கையில் கைத்தறிக்கு தனி கவனிப்பு

புதுடில்லி : மத்­திய ஜவுளி அமைச்­சக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:அமைச்­ச­கம், புதிய ஜவுளி கொள்­கையை உரு­வாக்கி வரு­கிறது. இதற்­காக, மாநில அர­சு­கள், ஜவு­ளித் துறை பிர­தி­நி­தி­கள் உள்­ளிட்­டோ­ரு­டன் ஆலோ­சனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது.அடுத்த மாதம், புதிய ஜவுளி கொள்கை வெளி­யி­டப்­படும். ஜவுளி ஏற்­று­ம­தியை, 2024 – 24ம் நிதி­யாண்­டில், 30 ஆயி­ரம் கோடி டால­ராக உயர்த்தி, 3.50 கோடி பேருக்கு, கூடு­த­லாக வேலை­வாய்ப்பு வழங்க, புதிய ஜவுளி கொள்கை துணை புரி­யும்.
இக்­கொள்­கை­யில், கைத்­தறி துறை வளர்ச்­சிக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும்.சிறிய சந்­தை­க­ளுக்­கான, பிரீ­மி­யம் கைத்­தறி துணி­க­ளு­டன், பாரம்­ப­ரிய கைத்­தறி துணி வகை­கள், அருகி வரும் கைவினை பொருட்­கள் ஆகி­ய­வற்றை பரா­ம­ரிக்­க­வும், பாது­காக்­க­வும், தனி கவ­னம் செலுத்­தப்­படும்.உள் அலங்­கா­ரம் மற்­றும் வாழ்க்கை பாணி­க­ளுக்கு ஏற்ற, தர­மான கைத்­தறி பொருட்­களை தயா­ரிப்­போ­ருக்கு, ஊக்­கச்­ச­லுகை வழங்­க­வும் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை