கிராமங்களில் தடையின்றி மின் சப்ளை வழங்க...திட்டம்: புதிய டிரான்ஸ்பார்மர்கள் மின்கம்பங்கள் அமைக்க முடிவு

தினமலர்  தினமலர்

கம்பம்;கிராமங்களில் மின் இழப்பை குறைத்து தடையின்றி மின்சாரம் வழங்க, புதிய டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்கம்பங்கள் அமைப்பது, ஒயர்களை மாற்றுவதுதேவையான அளவிற்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட உள்ளன. கம்பம்,உத்தமபாளையம், சின்னமனுாருக்கு மட்டும் ரூ. 100 கோடியில்இப்பணிகள் நடக்க உள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதற்கேற்ப உற்பத்தி இல்லாததால் பற்றாக்குறை நிலவுகிறது. கோடையில் இதன் பாதிப்பு அதிகமாகிறது. இதை சமாளிக்க திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், மின்வழித்தடத்தில் ஏற்படும் இழப்புகளை தடுக்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.சமீபத்தில் மத்திய அரசின் 'உதய்'திட்டத்தில் நமது மாநிலம் இணைந்ததன் மூலம்,மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுவழங்கியுள்ளது.
அதைக் கொண்டு மின்வாரியத்தின்உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மின்சப்ளைசரியாக இருக்கவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.'உதய்' திட்டத்தின் கீழ் தற்போது கிராமங்களில் தேவையான அளவிற்கு டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் அமைக்கவும், தேவையானஎண்ணிக்கையில் மின்இணைப்புக்கள் குறிப்பாக விவசாய இணைப்புக்கள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆலோசனை
சமீபத்தில் தேனி கோட்டத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகங்களில்அந்தந்த உட்கோட்டத்தில் கிராமங்களில் பணியாற்றும் ஒயர்மேன்கள்போர்மேன்கள், உதவி பொறியாளர்களை அழைத்து ஆலோசனைசெய்யப்பட்டுள்ளது மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'உதய்'திட்டத்தின் கீழ் கிராமங்கள் மட்டுமல்லாமல் நகரங்களிலும்தேவையான அளவிற்கு டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் அமைத்தல்மின்ஒயர்கள் மாற்றுதல், தேவைப்படும் இடங்களில் புதிய ஒயர்கள்அமைத்தல், துணை மின்நிலையங்களில் பவர்டிரான்ஸ்பார்மர்உள்ளிட்ட உபகரணங்கள் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறஉள்ளது.
குறிப்பாக தற்போது மின்வழித்தட மின்இழப்பாக 18 முதல்21 சதவீதமாக இருப்பதை 13.5 சதவீதமாக குறைக்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்குதல், மின்இழப்பை குறைத்தல், நுகர்வோர்களுக்கு இடையூறின்றி மின்சப்ளைவழங்குவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தேனி மின்பகிர்மானவட்டம் சின்னமனமனுார் கோட்டத்தில் உள்ள சின்னமனுார், கம்பம்,உத்தமபாளையத்திற்கு மட்டும் ரூ. 100 கோடிக்கு பணிகள்மேற்கொள்ள மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, ஆலோசனை கூட்டங்கள்நடத்தப்பட்டு வருகிறது,' என்றனர்.

மூலக்கதை