அமெரிக்கா வேண்டாம்! : இந்திய மாணவர்கள் பீதி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவில், துப்பாக்கிச்சூடு, 'விசா' கட்டுப்பாடு, போன்ற காரணங்களால், அங்கு சென்று உயர் கல்வி கற்கும், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்களில், இந்தியா, சீனா நாடுகளைச் சேர்ந்த, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், உயர் கல்வி படித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் தங்கி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும், 'எச் 1- பி' விசாவிற்கு, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்; இதேபோல், அந்நாட்டில், சமீபத்தில், அடுத்தடுத்து, இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன. இதனால், வரும் கல்வியாண்டில், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் சேர்வதற்காக, விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழக கூட்டமைப்பு நடத்திய ஆய்வுகளில், இது தெரிய வந்துள்ளது.அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பட்ட படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 15 சதவீதம் குறைந்துள்ளது; மற்ற படிப்புகளுக்காக விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 26 சதவீதம் குறைந்துள்ளதாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை